என்னையாவது விடுங்கள்
நான் கணணியை கொண்டே
கண்டனம் தாண்ட ஆசைப்படுகிறேன்,
என்னையும் உங்கள் உலகத்தோடு
சுருக்கி விடாதீர்கள்,
நான் காக்கைக்கும்
சங்கீதம் கற்றுக்கொடுக்க போகிறேன்,
என்னையும் மேடைக்கு வெளியே
ஓ... போடும் ஒருவனாக மாற்றி விடாதீர்கள்,
நீங்கள் பேசும் பிரபலங்கள் பட்டியலில்
என்னயும் சேர்த்துக்கொள்ள போகிறேன்,
வழக்காறு என்று சொல்லிக்கொண்டு
என்னை வயல் வேலைக்கு அனுப்பி விடாதீர்கள்....