ஏணிப்படிகள்

ஓவ்வொருவர் வாழ்விலும் உயர்விற்கு-அன்று
யாரவது ஒருவர் ஏணிப்படியாய் நின்று

இது சாய்ந்த நிலையில் இருந்தாலும் ஏறியவர்
நிலை மட்டும் என்றும் தாழ்வதில்லை

கற்ற கல்வியும் ,பெற்ற திறமையையும் போதாது
நல்ல வழிகாட்டுதல் இன்னும் அவசியமாகிறது

எண்ணம் வேண்டும் ,செய்ய மனது வேண்டும்
எல்லோருக்கும் இருப்பதில்லை இது மட்டும்

எல்லோரும் சொல்வார் நானும் நினைத்தேன் என்று
இது பெருமைக்கு கூறி கொள்ளும் சிருமைதான்

உறவு வேண்டும் , உரிமை வந்து – இன்னும்
செய்யும் எண்ணம் மனதில் கொண்டு

தாழ்ந்த குடும்பம் உயர வேண்டி – அங்கே
உயர்ந்த உள்ளம் ஏணிப்படியாய் நின்று

இன்று ஏணி துரு பிடித்த நிலை இருந்தாலும்
ஏறி சென்றவர்கள் திரும்பி பார்ப்பதில்லை

ஏற்றி விட்டதால் ஏணிக்கு பல நன்மை
ஏறி சென்றவன் நல்ல வாழ்வால் மகிழ்மை

மாற்றம் தந்த இறைவனிடமே
ஏற்றம் பெற துவா கேட்போம் !

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (12-Jun-13, 9:32 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 670

மேலே