நகைச்சுவை 22

உண்ண முடியவில்லை
உறங்க முடியவில்லை
பேச முடியவில்லை
எங்கே இருந்துதான்
நீ பிறந்து வந்தாயோ?

எங்களுக்கும் நோய் வந்தால்
எம் பி பி எஸ் டாக்டர் தான்
ஊசி போடுவார்...
நீ எந்த ஊரில்
எம் பி பி எஸ் படித்து வந்தாய் ?ஐயோ !

எந்த ஊரில் பிறந்தாய்
எத்தனை பட்டம் தான் வாங்கினாய்?
அய்யோ! அம்மா...!
எத்தனை இடத்தில்தான்
உன்னிடம் ஓசியிலே
ஊசி போட்டுக் கொள்வது ?

டாக்டர் ஊசி போட்டால்
நோய் குணம் ஆகும் என்பார்கள்..
நீ எந்த டாக்டரிடம் படித்துக்
கற்று வந்தாய்?உன்னால்
நோய் தானே அதிகரிக்கின்றது !

அப்பப்பா...!நடக்க முடியவில்லை
உட்கார முடியவில்லை
தூங்க முடியவில்லை
நிம்மதியாக தினமும்
நீ போடும் ஊசிக்குத் தான்
என்றும் அளவே இல்லை ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Jun-13, 11:43 pm)
பார்வை : 210

மேலே