என் உள்ளத்தில் காதல் வேண்டாம் (கஸல்)

என் உள்ளத்தில் காதல்
வேண்டாம் போதும்
அவஸ்தை
தயவு செய்து இன்னும்
கொஞ்சம் காயப்படுத்து
உன்னை நினைத்தபடி வாழ
என் ஒவ்வொரு இமை
சிமிட்டலும் உன்னை
நான் இழப்பதாகவே
வருந்துகிறேன் தயவு செய்து
கண்சிமிட்டும் நேரம் வராதே
காதல் என்பது
உடல் முழுவதும்
உள்ளமாக மாறும்
இயற்கை நிகழ்வு
கஸல்;141