தூக்குமேடையில் ஒரு மணமாலை
![](https://eluthu.com/images/loading.gif)
மணமாலை சூடிய பின்பு
மனதிற்குள் ஒரு திகைப்பு
மனதிற்குள்ளவனை மறைத்து
மறு ஆளை
மனம் செய்ததற்கு ...
விதியின் கோளாறு
விளைந்து விட்டது
விதையாக
என் வாழ்வு ...
என்ன
செய்வேனோ ?
யாருக்கு
உண்மையாக
உணர்வேன் ...
உத்தமர்களாக
இரு பேரும்
உத்தமியாகத் தான்
நானில்லை ...
யாரிடம் கேட்பேன்
என் வாழ்வின்
விடையை ...
விடையின்றி
கேள்விக்குறியாக
நானிருக்கையில் ...
குற்ற உணர்வோ
குறுகுறுகின்றது
ஒவ்வொரு நிமிடமும் ...
தூக்குமேடையில்
இருக்குமெனக்கு
துறப்பது
ஒன்றுதான்
துணிகரமானது ?