என் நிலை
கண்ணாடியின் முகம்
கண்ணுக்கெதிரே ..!
மனதிற்குள்ளதை
மறைத்து விடுகிறது ..!
வாழ்வு எனக்கு
வறுமையாக ..!
சாவு கூட
சாந்தமாகிறது..!
கண் விழித்தாலே
கலவரம் தான்..!
வாடகையான வீடு
வட்டியில் தான் ..!
பட்டமான படிப்பு
பட்டினிதான் பிழைப்பு ..!
உயரமான பேருந்துவிலை
உறவுகளை மறக்கச்செய்ய ..!
பாலை பருக
மறக்க வைக்கிறேன்
மழலைக்கு
விலைஏற்றத்துக்காக ..!
அனைத்தும் விலையேறுகிறது
என் வருமானத்தை தவிர........