தொழிலாளர் தினம்...!!!

சூடான வியர்வை
தினம் தோறும்
வழிந்தோடி
மனது கனத்து
உடலும் நலிந்து
சாதிக்கத் துடித்து
வாழத்தான் முடியாது
முதலாளிகளின்
முகவுரைக்கு மட்டும்
தீனி போடத் துடிக்கும்
மானிடர் தினம்
ஒரு நாள்
நினைத்துப்பார்க்க
துடிக்கும் நாள் தானே..!!!

எத்தனை கூக்குரல்களில்
குரல்வளை
நெரித்து வார்த்தைகளில்
சுதந்திரங்கள்
பறிக்கப்பட்டு
அடிமை என்ற முத்திரை
குத்தப்பட்டு
போலிமுகங்களை
கிழித்தெறிய
அடையாள படுத்தப்பட்ட
தினம் என்று
ஏமாற்றம் கொள்கின்றோமா
இந்த மே தினத்தில் மட்டும்
சாந்தம் கொள்கின்றோமா...!!!

வாழ்க்கை என்னும்
வட்டத்தில் எத்தனை
போராட்டங்கள்
தொழிலாளர்களை
மட்டும் சூழ்ந்துகொன்டதே
விடியல் மட்டும்
தொலைந்துபோய்
வெளிச்சம் வருகின்ற
திசைகளில்
தேடுகின்றோம்
காலம் காலமாக
தேடுகின்றோம்
ஏமாற்றப் பட்டவர்களாகவே
தொழிலாளர்கள்
முத்திரை ஏமாற்றம் தானே...!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (14-Jun-13, 3:19 pm)
சேர்த்தது : rajendrakumar
பார்வை : 376

மேலே