நினைவுச் சுவைகள்
நினைவுச் சுவைகள்
ஞாயிறு வீதியில் பூத்த
நிறவாதப்பூவின் நகலி
ஒளிப்பேழையில்
படமாக்கப்பட்ட
முகமல் விரிப்புத் தரை
விழிமையில் இல்லாத
விழிமியங்கள்
வாரிகைக் கடையில்
புறங்கடை ஆர்ந்திட்ட சேணம்
நாள்மீன்களின் ஊறல்
உவர்ப்புத் தேறலொடு
கூடிய வர்ணனை விழா
காட்சிப்பேழையின்
அடுக்ககங்களில்
நிறமாலைகளாக
திரைக்கதை பாடவிதானங்கள்
பொந்திகையில்லாத
புனர்வாழ்வின் தெவிட்டுதல்கள்
உப்பரிகை அரை சுவரின்மேல்
பேரரளி அணிகலன்கள்
உலர்ந்த காற்றிலே
நொசிவிழையில்
நடனமாடிடும் குப்பாயங்கள்
சூல்மேகத்தின் நெறிமிறை,,
திறந்து வைக்கப்பட்ட
சாளரத்தின் வழியே
சான்றுறுதிச் செய்திடும் மழைவாசம்
நூதன சாலையின்
செருக்கள அமைதி
யாரென எட்டத்தூண்டிடும்
சப்பாத்துச் சத்தம்
சண்டமாருதத்தில்
சாய்ந்து சுழலுகின்ற
வீதிமுனை பேருந்து தரிப்புப்பதாகை
பட்டைக் குறியீடுகளாக
நிலவுத்தொகை
ஞாபகங்களின் நிகழ்பதிவி
தற்கோள் நயத்தலில்
அழகாக தோன்றிடும்
எதிர்பதம் சொல்லிடாத தோரணவாயில்
திருத்தகைப் போக்குவழிகளில்
கண்டெடுக்கப் பட்ட
இந்திரநீலிம யோலங்கள்
கூதிர்கால நிழற்சாலையில்
பாணிப்புகளின் நினைவாடல்கள்
அதிமதுர அகவாசத்தில்
இருப்புப்பாதை கடவைகளாக
அரக்கு நிறங்கலந்த
துலக்கச் சாமந்திகளின்
பிறைநாள் அவிநயக் கூத்து
மதில் சுவரார்ந்த
மழலையின்
விரிசில் ஓவியங்கள்
தொண்டைக்குழி
பெருவோட்டங்களின்
நழுவியக்க மடற்குழு
குசினியில் எழும்பும்
அடிசில் ஐந்திர
வெதுவெதுப்பு நெடிகள்
எல்லாமே
வாழ்க்கை பதிவேட்டின்
ஏற்பாட்டியல் கணக்கீடுகள்
புகுபதிகை விடுபதிகைகளின்
பொதித் தானிகளாக
அனுசரன்