சிகரம் தொடும் எண்ணங்கள்

சிந்திக்கச் சுதந்திரம் இல்லை மனம்
சந்திக்க மனிதர்கள் இல்லை
சந்தேகப் பாறைகளாய் மோதல்கள்
மோதல்களின் பொறாமைக் கண்கள்
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையாய் ...!

நஞ்சுண்ட நாக்குகளின் தீஞ்சொற்கள்
விழிப் பூக்களை விசமாக்கும் எழுதுகோலின் கண்ணீர் சாயங்கள் இம்மண்ணில்
வெளுக்க முடியா தீண்டல்கள்
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையாய் ...!

புகழ் ஏணியைத் தொடவிடாத தேரைகளாய்
இத்தனை நல் எண்ணங்களின் சாயங்களையும்
வெளுக்கத் துடிக்கும் வெண்பனி தூறல்கள்
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையாய்...!

பச்சோந்திகளாய் வேடம் தரித்து
வாழ்நாளைக் துயிலே வாழ்வாக வாழும்
நத்தை போல குறுகியும் உருகியும்
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையாய் ...!

பாதி கிணறு தாண்டியும் தாண்டாமலும்
பாதி மரத்தில் எறியும் ஏறாமலும்
தான் கொண்ட குறிக்கோளை அடைய முடியா
தேனை எடுக்க மரம் ஏறத் துடிக்கும் மனம் அலைபாய தொட்டும் தொடாமலும்
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையாய் ...!

என் கை விரல்கள் வெந்நீரில் விட்டுத் துடித்தும்
தீஞ் சுவாளைய்களால் எரிந்தும் எரியாமலும்
பீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழத் துடிக்கின்றன
சிகரம் தொடும் எண்ணங்கள் தடையில்லாமல் ...!

தாய் தமிழ் மொழியை வளர்க்கவும்
பாராட்டும் நெஞ்சங்களை வாழ்த்தவும்
எதையும் தாங்கியே நிற்கின்றன என் மனம்
ஊரோரத் தூண்களின் அமைதியான
நிசப்தமான காவலில் சுவாசிக்கின்றன ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (14-Jun-13, 12:03 pm)
பார்வை : 522

மேலே