மனது மயங்கவில்லை!

ஒன்னும் புரியவில்லை--இந்த
உலகம் தெரியவில்லை.
பின்னும் பாதையாலே--பாவி
எண்ணம் தெளியவில்லை.

ஏதும் அறியவில்லை--ஒரு
சூதும் பழகவில்லை.
பேதம் உணர்வதற்கோ--நானோ
வாதம் பயிலவில்லை.

சொந்தம் விரியவில்லை-நல்ல
பந்தம் வளரவில்லை.
எந்த நிழலிருக்கு.நம்பி
ஒண்ட இடமுமில்லை.

ஆசை கொள்ளவில்லை--அதனால்
காசை மதிக்கவில்லை.
பொய்கள் செய்வதற்கும்--எனக்கு
போக சிந்தையில்லை

மனதில் மயக்கமில்லை---எந்த
கனமும் மனதிலில்லை..
பிணக்கம் வளர்வாலே--வரும்
கணங்களும் தேவையில்லை.

எவரோடும் போட்டியில்லை--எனது
எண்ணமும் கோட்டியில்லை.
நட்பு நலம் வாழ--இன்னும்
நாளும் விடியவில்லை.

எழுத்தின்றி வேறில்லை--வேறு
வழுத்திட நாதியில்லை.
பழுத்துவிட்டேன் உதிரவும்--இனி
கொழுத்து ஆவதில்லை.

நானொரு பாவியில்லை-இங்கு
யாரோடும் பகையுமில்லை.
அப்பாவி எனும் பெருமை--அய்யா
அதைவிடப் புகழுமில்லை.


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (14-Jun-13, 11:22 am)
பார்வை : 171

மேலே