அப்பாவின் ஆளுமை....

கடவுள் கொடுத்த வர​ம்​!!!
63 வயது ஆண் சிங்கத்தின் ஆளுமைத்திறன்!!!

தாலியது தாங்கியதென்னை கருவறையில்....
தந்தை அவர் தாங்கியதென்னை நினைவறையில்!!!

உழைப்பில் என் அப்பாவிற்கு...
வியர்வையை தவிர
வேறு எந்த ஊதிய உயர்வும் இல்லை!!!

அதை நேரலையில் பார்த்தவரின்...
நீரலைக்கு எல்லையே இல்லை!!!

முத்துக்கள் மூன்றினை
முதிர்ச்சியில் பெற்றெடுத்தவர்!!!

படித்து பகட்டாய் வாழ,

நல்லது என்னதென்று நயமாய் சொன்னவர்...
நான் நயந்து கேட்காத போது நாக்கை கடித்தவர்!!!

தோல்விதனை எதிர்கொள்ள தோளில் சுமந்தவர்...
தோல்விதனை அடைந்தாலும் தொட்டனைத்தவர்!!!

அவ்வப்போது,
அமைதிப்பூங்காவில் (சமயலறையில்)
சண்டை சத்தம்!!!

அது என்னை எந்த வகையிலும் பாதிக்காத சட்டம்!!!

அந்த அடுபாங்கரை சண்டை...
என்னை,
அக்கரையில் சேர்பதற்கான அக்கறை!!!

புகை வண்டி ஒன்று...
குகையினுள் சென்று...
குருதிதனை அடைந்து...
குதூகலிக்கும் குறும்படம்....
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த படம்...
வேறொன்றும் இல்லை சிகெரட் சித்தரிப்பு :)

அம்மாவின் தாலாட்டில் தூக்கம்....
அப்பாவின் ஆலோசனையில் ஊக்கம்....

13 இல் பள்ளிப் பருவத்திற்கும்...
19 இல் நான் அடைந்த பக்குவத்திற்கும்
அப்பா எனும் தாரக மந்திரமே காரணி

வயோதிக வயதிலும்
வாலிபனாய் உழைத்துக்கொண்டிருக்கும்
என் அப்பாவின் தினம் (ஜூன் 16)!!!

இது கொண்டாடப்பட வேண்டும் தினம் தினம்....


​அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்....

எழுதியவர் : ஜெகன் .ஜீ (14-Jun-13, 3:29 pm)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 138

மேலே