இவள் வாழ்வில் அதிசயம் நடப்பது எப்போது.. ?

வேப்பம் மரத்தில்
வேர் வரை
பால் வடிகிறதாம்...

பட்டு கிடந்த ஆலமரம்
பகல்பொழுதில் திடீரென
எழுந்து நிற்கிறதாம்...

சுப்பன் வீட்டு தோட்டத்தில்
சூரியகாந்தி பூவின் எடை
ஐந்து கிலோவாம்...

வாழை மரத்தின்
வாழைத்தார் வளர்ந்து
வாசல் தொட்டு நிற்கிறதாம்...

இவ்வுலகில்
எங்கோ ஓரிடத்தில்..
அதிசயம் நடந்தேற...

இவள் வாழ்விலும்
ஏதேனும் ஓர் அதிசயம்
நடந்தேராதோ...?

பிச்சை எடுக்க
ஏந்தும் கைகளும்
நாளை புத்தகம் தூக்காதோ...?

-PRIYA

எழுதியவர் : PRIYA (15-Jun-13, 12:49 am)
பார்வை : 144

மேலே