...கிளி...

ஒரு மளிகைக்கடைக்காரர், தம் கடையில் ஒரு கிளி வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு நிறையப் பேச கற்றுக் கொடுத்துள்ளார். அந்தப் பக்கம் போக வர இருப்பவர்களை நிறைய கிண்டல் செய்யும் கிளி. அந்தக் கடைக்கு நேர் எதிரே உள்ள வீட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அந்த கடையைத் தாண்டும் போதெல்லாம், கிளி அவளை' ஹே' என்று கூப்பிடும். அவள் திரும்பிப் பார்த்ததும் 'நீயேன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்" என்று கேட்கும். ஒவ்வொரு முறையும் இப்படி நடந்து வந்ததால், பொறுமை இழந்த அந்தப் பெண் கடைக்காரரிடம் முறையிட்டாள். கடைக்காரரும் "சரிமா, கோபப்படாதே. நான் கிளியை கண்டிக்கின்றேன்' என்று கூறி விட்டார். இரண்டு நாட்கள் கழிந்தன. அந்தப் பெண் கடைப் பக்கம் வந்தாள். மனம் குறுகுறுவென்று இருந்ததால், கிளி இப்போது என்ன சொல்லும் ஆவலில் அருகில் போய் நின்றாள். கிளி பேசாமல் இருந்தது. 'சொல்லலையா?' என்று கிளியைப் பார்த்து கேட்டாள். "அதான் உனக்கே தெரியுமே" என்று கூறிவிட்டு கிளி வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டதாம்......!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (15-Jun-13, 8:17 am)
Tanglish : kili
பார்வை : 233

மேலே