கொஞ்சம் சிரிக்கலாமே !!

படித்துக் கொண்டிருந்த காலம்!
பயமறியாத காலம்!
இப்போதும் படிக்கிறேன்!
அப்போதை சுவைக்கிறேன்!

தமிழாசியர் வகுப்பு!
தமிழ் கவிதை படிப்பு!
அமிர்தமென இனிப்பு!
அள்ளித்தந்தார் வனப்பு!

ஆனாலும் என் நினைப்பு
அங்கில்லை இருப்பு.
கவனித்த ஆசிரியர்
கடிந்ததவர் பொறுப்பு,

என்னய்யா பிச்சைய்யா!
சொன்னது என்னய்யா?
எண்ணத்தில் நுழைந்ததோ!
என்ன அது சொல்லென்றார்.

எல்லாமே நுழைந்ததய்யா.
என்றாலும் இறுதி பொத்தான்
இன்னும் அது நுழையவில்லை
என்னை அதில் நுழைக்குதென்றேன்.

பொத்தானை திருத்திக்கொண்டு
அத்ததனை மறைத்துக் கொண்டு
பாடுபொருள் என்னவெனறு
பாடிக்கேட்டார் அக்கவிக்கு..

அதுவொரு பெரும்பாடய்யா!
அதைப்பாடியவர் பாவமய்யா!
புரியாததைப் புரிந்தது போல்
பொய்வேடம் காட்டினேன்.

நானென்ன கேட்கிறேன்!
நீயென்ன சொல்கிறாய்!
பொருந்தவில்லை பதிலென்று
புளிய விலார் எடுத்தெழுந்தார்...

திருமண நாள் குறித்தோமா !
வரவேற்பும் அழைத்தோமா !!
பொருந்தாவிட்டால் என்னய்யா!
போகட்டும் விடுவீரென்றேன்.

கொல்லெனச் சிரிப்புச் சத்தம்
அள்ளியது அறையெங்கும்.
எல்லோரும் நாமுங்கூட
இணைந்துமே சிரிக்கலாமே!


கொ.பெ,பி.அய்யா,

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (15-Jun-13, 11:41 am)
பார்வை : 669

மேலே