இடம் மாறிய சனி

சனிப்பெயர்ச்சி- தனிப்பெயர்ச்சி வேதனையானது மட்டுமல்ல, வேடிக்கையானதும்கூட.
திருமணமான புதிதில் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு முதன்முதலாகக் கோயிலுக்கு போகிறான் கணவன். வழியில் மனைவியின் காலில் ஒரு முள் குத்திவிடுகிறது. அது தன்னுடைய கண்ணில் குத்தியதாகத் துடித்துப் போய் கதறுகிறான்.
""சே, சனியனே! என் மனைவி காலிலா குத்துவே?'' என்று கூறி முள்ளை எடுத்து எறிந்தான். ஆறேழு வருடங்கள் கழிந்தன. அதே கோயிலுக்கு தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மனைவியுடன் சென்றான். அப்போது முள் மனைவியின் காலில் குத்திவிட்டது. அவள் "ஓ'வென கதறிவிட்டாள்.
உடனே கணவன்,""ஏய் சனியனே! முள் இருக்கும் என தெரியும் அல்லவா... பார்த்து வரக்கூடாதா?'' என்று கூறினான். என்ன வாழ்க்கை!
ஆறு ஆண்டுகளுக்கு முன் முள்ளில் இருந்த சனி, அதாவது அன்று முள்ளை சனி என்றான். இன்று அந்த சனி மனைவிக்கு இடம் மாறிவிட்டது. மனைவி சனியாகிவிட்டாள். இந்த சனிப்பெயர்ச்சி எப்படி?
கூறியவர்: சுகி.சிவம்