கோபம்
கண்களில் நீர் வருவதையே
அறியாத உலகமடா இது....
இதயத்தின் வலி எப்படி தெரியும்
இந்த மானுடரின் கோபத்திற்கு....
ஏய் மானுடமே!
ஏன் கோபப்படுகிறாய்...
இரக்கமே இல்லாத
ஒரு இருதயத்தை வைத்துகொண்டு
ஏன் பல இதயங்களை காயப்படுத்துகிறாய்,
உன் கோபத்தினால்....
உனக்கே தெரியும்
அன்பெனும் ஆயுதம்
ஓராயிரம் உண்டு உன்னிடத்தில்...
இன்னும் ஏன் அகப்பட்டுக் கொண்டிருகிராய்
உன் கோபமெனும் சிறையில்....
கற்றுக்கொள்லடா நீயும்
கோபம் ஓர்
அணையாத காட்டு தீ
எத்தனை கண்ணீர் ஊற்றினாலும்
அதை அணைக்க முடியாது...
அன்பெனும் ஆயுதத்தை தவிர....