கண்ணீர் அஞ்சலி
![](https://eluthu.com/images/loading.gif)
சாயாத கோபுரங்களைச்
செதுக்கிய சிற்பி!
இன்றும் வாசம்
விட்டுப்போகாத
பாலைவன ரோஜாவை
கிள்ளித் தந்த
படைப்பாளி!
காலத்தின் நீரோட்டத்தில்
கரையாத
கோலங்களை வரைந்த
வண்ணக்கலைஞன்!
வேடம் தரிக்காத
சமூகப்போராளி!
யதார்த்த சினிமாவை
தனக்கான பாணியில்
வகுத்துக் கொண்ட
பகுத்தறிவாளி!
நகைச்சுவை நாயகன்
தன் மானத் தமிழன்
ஒவ்வோர் சந்தர்ப்பங்களிலும்
தமிழ் ஈழ உரிமைப்போருக்கு
ஓங்கிக் குரல் கொடுத்த
இன மான உணர்வாளி!
சுய நலம் எனும்
கூட்டைத்தாண்டி
தன் சுய வாழ்வை
தமிழ் சமூகத்திற்காய்
தந்த உன்னத மனிதர்.
தமிழ் மக்கள் விடிவுக்காய்
எப்போதும் ஒலித்துக்
கொண்டிருந்த குயில்.
எம்மை விட்டு
எட்டாத உயரத்திற்கு
சென்று விட்டது!
அண்ணனே!
உங்கள் அர்ப்பணிப்புகள்
எம் இதயங்களில்
அழியாத சுடராக என்றும்
சுடர் விட்டு எரியும்!
உங்கள் பாதங்களில்
எம் கண்ணீர்
அஞ்சலிகளை
காணிக்கையாக்குகின்றோம்!