அவர்கள்

அவர்கள்

கால்களை

எண்ணி கொண்டார்கள்

கால் விரல்களை அல்ல ...

அவர்கள்

கைகளை

எண்ணி கொண்டார்கள்

கை விரல்களை அல்ல ....

அவர்கள்

கண்களை

எண்ணி கொண்டார்கள்

இமை முடிகளை அல்ல ....

அவர்கள்

காதுகளை

எண்ணி கொண்டார்கள்

காதுகளில்

வளந்து இருக்கும்

முடிகளை அல்ல ....

இப்படி ...

அவர்கள்

கால்கள் இரண்டு

கைகள் இரண்டு ...

கண்கள் இரண்டு

காதுகள் இரண்டு

தங்கள் உடம்பில் இருப்பதை

அவர்கள் எண்ணி பார்த்தும்

நம்ப மறுத்து விட்டார்கள்

காரணம்

அவர்கள் தங்களை இன்னமும்

முழுமையாய் நம்ப மறுக்கிறார்கள்

அதனால்

தாங்கள் மனிதர்கள் என்பதை

உணர மறுத்து

அவர்கள் மனிதர்களாகவும்

வாழவில்லை

மிருகமாகவும் இருக்கவில்லை

நேற்றும் ...!

இன்றும் ...!

நாளையும் ...?

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (16-Jun-13, 3:30 pm)
Tanglish : avargal
பார்வை : 80

மேலே