தபால் பெட்டியின் கதை!...

1500-ஆம் ஆண்டில் பதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார் போர்த்துக்கீசிய மாலுமி பார்த்தலோமியே டயஸ். அவருடன் மேலும் சில மாலுமிகளும் கடற்பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிரிக்காவில் புயலில் சிக்கியது.

அப்போது மாலுமி டயஸ் மரணமடைந்தார். அவர் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிக்க கடற்கரைத் தீவு ஒன்றில் ஒதுங்கியது. உயிர் பிழைத்த மாலுமி ஒருவர், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு கடிதத்தில் எழுதி, அதைத் தன்னுடைய காலணிக்குள் போட்டு ஒரு மரத்தில் தொங்கவிட்டுச் சென்றார்.

பத்து மாதங்களுக்குப் பிறகு அந்தத் தீவுக்கு வந்த மற்றொரு போர்த்துக்கீசிய மாலுமியான ஜோஓடாநோவா என்பவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் காலணியைத் தற்செயலாகப் பார்த்தார். உள்ளே இருந்த கடிதத்தைக் கண்டு விவரம் தெரிந்து கொண்டார்.

அதிலிருந்து அந்தத் தீவுக்கு வருபவர்கள் அந்தக் காலணியையே கடிதங்கள் போடும் பெட்டியாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதுவே உலகின் முதல் தபால் பெட்டி.

தென் ஆப்ரிக்காவிலுள்ள மோசல் என்னுமிடத்தில் இன்றும் அந்த மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மரத்தில் காலணி வடிவ தபால் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

தபால் பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் வழக்கம் உலகில் முதன்முறையாக 1874-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டனில் தொடங்கியது.

-கா.முருகேஸ்வரி, கோவை.

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Jun-13, 6:46 pm)
பார்வை : 230

மேலே