"சிறந்த கவிதைகள் " நாள் - 14/06/2013 ***ஆவாரம் பூ***
இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்...
14/06/2013 அன்று வெளியான சிறந்த படைப்புகள் நடுவரால் தொகுத்து அளிக்கப்பட்டு உள்ளது..
1 .அம்மாடி என் தங்க மகனே..!!! -நெல்லை பாரதி
சேர்த்தது : bharathigeologist
2. காதல் வலி -பூவதி
3. உயர்திரு.சுயநலவாதி
-வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார்
4.மகாகவி பாரதியார் - சேர்த்தது : Kalaiselvan டெஇவசிகமனி.
============================================
இக்கவிதைகளின் தொகுப்பு...
1 .அம்மாடி என் தங்க மகனே..!!!
ஊருக்கு கிழக்கிலே
உள்ள நம் காணி நிலத்திலே
ஊனும் குறுகி உடலும் கருகி
தினந்தோரும் பட்டினியாய்
புல் அறுத்து தழை ஒடித்து
தன்னந்தனியாய் தனம் சேர்த்து
பள்ளிக்கூடம் உன்னை சேர்த்தேன்
ஏட்டெழுத்து அறியா நான்
தரணி உன்னை ஏறெடுக்க
உயர் கல்வி உனக்களிக்க
வீட்டையும் எழுதி வைத்து
காட்டையும் அடகு வைத்து
கால் நடையாய் நடந்து வந்து
கல்லூரியில் உன்னை சேர்த்திருக்கேன்
உன் தேர்வுக்கு பணம் கட்ட
பருத்தி எடுத்து விற்று விட்டு
பழைய சேலை கட்டிக்கொண்டு
பட்டணம் வந்து பார்க்க வந்தால்
அம்மான்னு சொல்லா விட்டாலும் -நீ
வேலைக் காரின்னு சொல்லி விடாதே
அம்மாடி என் தங்க மகனே..!!!
கலைக்டர் நீ ஆகணும்னு
கனவெல்லாம் எனக்கில்லை
கைமாற்று வாங்காமல்
கையேந்தி வாழாமல்
கைத்தொழில் நீ கற்று
சொந்தக் காலில் நின்றிடணு்ம்
சுகமாய் நீ வாழ்ந்திடணும்..
- நெல்லை பாரதி
சேர்த்தது : bharathigeologist
========================================
2. காதல் வலி
உன்னை
மறப்பதாக
நினைத்து நித்தம்
செத்து செத்து
வாழ்வதைவிட
உன்னை
நினைத்துக்கொண்டே
ஒரு நொடியில்
செத்து வாழ்வது
மேல்
பூவதி
===========================================
3. உயர்திரு.சுயநலவாதி
இலட்சக்கணக்கில்
இனமழிந்து போனால்
நான் என்ன செய்வேன்?
இனிதே உண்டு
இன்புற்றிருப்பேன்
இனத்தை காக்க
போரென வந்தால்
நான் என்ன செய்வேன்?
எம்மினத்தை காட்டி கொடுத்து
என்னுயிர் காப்பேன்
ஒற்றுமை நம்மில்
ஓங்கி ஒலிப்பின்
நான் என்ன செய்வேன்?
ஒற்றர்களை விட்டு
ஓரவஞ்சகம் செய்வேன்
கஞ்சிக்கு வழியில்லாதவர்களின்
காட்சியை கண்டால்
நான் என்ன செய்வேன்?
காதல் கொண்டு
காமம் கண்டு
களைப்புற்றிருப்பேன்
வயதானவர்கள் பலர்
வக்கற்றுக் கிடந்தால்
நான் என்ன செய்வேன்?
வாங்கி குடித்து
வாந்தி எடுப்பேன்
சாலையில் ஒருவன்
அடிபட்டு கிடந்தால்
நான் என்ன செய்வேன்?
வேடிக்கை பார்த்து
வேலைக்குச் செல்வேன்
அனாதைகளென குழந்தைகள்
அதிகமிருந்தால்
நான் என்ன செய்வேன்?
அரசு உண்டு
பார்த்துக் கொள்ளுமென
ஆடிக் கழிப்பேன்
ஊரே தீயில்
பற்றி எரிந்தால்
நான் என்ன செய்வேன்?
ஊமையாய் இருந்து
உறங்கி கிடப்பேன்
பலபேர் இங்கு
பிச்சை கேட்டு வந்தால்
நான் என்ன செய்வேன்?
உதட்டை பிதுக்கி
ஓரம் செல்வேன்
தமிழன் வரலாறு
தொலைக்கப்பட்டால்
நான் என்ன செய்வேன்?
தொலைக்காட்சி பார்த்து
தூங்கிக் கழிப்பேன்
தமிழ் மொழியுனது
தாய்மொழியெடா என்றுரைத்தால்
நான் என்ன செய்வேன்?
அடச்சீ போடவெனவே
அடுத்தவன் மொழியை கற்பேன்
வா.சி. ப.ம. த.ம.சரவணகுமார்
======================================
மகாகவி பாரதியார்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ??
சேர்த்தது : Kalaiselvan டெஇவசிகமனி
======================================
நன்றி.
நடுவர் குழு.