காதல் கவிதைகள் எழுத வேண்டிடும் விரல்கள்...
ஆனந்த ராகம் மீட்டும் வீணை நான்
அன்ற்யும் மெட்டுக்களாய் நீ
கானக ராகம் பாடும் பறவை நான்
சுரங்களின் பயண திசையாய் நீ
மோனத் தவமாய் நான்
தவ பலனாய் நீ
இமை நீ .......
இளமை நீ ....
இனிமை நீ .....
தனிமை நீக்கும் வளமை நீ.....
கண் நீ...
காட்சி நீ....
பண் நீ....
பன்முக இன்பம் நீ.....
கனி நீ....
காமன் உளி நீ...
சாம பனி நீ....
கன்னி காவியம் நீ....
.......இப்படியெல்லாம் எழுத ஆசைதான் ..
அழும் கண்களும் வற்றிய வயிறுகளும்
ஒட்டிய உதடுகளும் வெட்டிய உறவுகளும்
தட்டிப் பறிக்கும் தவிப்போடு
எனது உனக்கான காதல் வரிகளை... !!!!
கதறும் வறுமையும் கந்தல் செழுமையும்
கந்தக புகையுள் கருகிய வம்சமும்
சொந்த மண்ணை இழந்த சோகமும்
வந்து கை மறித்து உனக்கான
என் கவிதை எழுதும்
விரல்களில் வெடி வைக்கிறதே ....