கிறங்கித்தான் போகிறான் -புதுக்கவிதை ...

சேலைக் கட்டி செந்துரமிட்டு

செண்பகப்பூந் தேராய்

அடிமேல் அடிதொடுத்து

அசைவுக்கொரு பாவம்காட்டி

வசியம் செய்துப் போகிறாள்

பழங்கவிதை ....



துப்பட்டா பறக்க

அப்பாடா எனவியக்க

இடையிலே இளமைகாட்டி

உடையிலே புதுமைகாட்டி

நடந்து வரும் அழகினிலே

கிழட்டு கவிஞனும்

கிறங்கித்தான் போகிறான்

புதுக்கவிதை ...

எழுதியவர் : காசி.தங்கராசு (19-Jun-13, 12:13 pm)
பார்வை : 124

மேலே