இன்ப வலிகள்
ஒவ்வொரு முறையும் எனது கவிதைகளை
சிலுவையில் அறைகிறாய்..........
படைப்பின் வலி உணராதவனாய்........
எனது கவிதையின் படைப்பு சிறியது தான் - ஆனால்
என் காதலின் படைப்பு அழமானது.
அன்பே....!!!
சிற்பங்களின் படைப்பை கூட சிற்பி அறிவான் - ஆனால்,
நான் உன் மீது கொண்ட காதலின் படைப்பை
யார் அறிவார்......?
உனது மென்மையான மனதினை கண்டு
என் மேனி சிலிர்கிறது..!!
உனக்காக ஏங்கவில்லை இந்த உயிர்,
உனது காதலுகாக ஏங்குகிறது.......
கதவின் எதிரே எனது அருகில் வருவது
நீயாக இருக்க கூடாத என்று சில சமயம் ஏங்குவதும்..........!!!
தாயின் மடியில் படுக்க மனம் இன்றி - உன்னை தேடும் என் கண்களின் ஏக்கமும்.......!!!
தெரிந்து கொண்டே நடிகிறாயா - இல்லை
பிடிக்காமல் செல்கிறாயா..........?
அன்பே...!
என் கற்பனை வெறும் ஓவியம் அல்ல...
காதல் படைப்பின் காவியம்......
ஏன் னடா இந்த பிடிவாதம்
ஏன் னடா
மறுக்கிறாய் நீ என் மீது கொண்ட காதலை
எனது சுவாச காற்று உண்மையானால் - அதின்
மூச்சு காற்று நீயாக இருப்பாய்
தருகிறேன் சமர்பனமாக உன் காலடிக்கு என்
கவிதை பூக்களை........