லிமரஹைகூ

மதிப்பெண் குறைவென குத்தி வெடிக்கும் நாக்கு
மதிப்பான மழலையர்
உயிரைக் குடிக்கும் தூக்கு...!!
======
தூக்கி வச்ச பாடை
செல்ல வழி இல்லாமல்
தெரு அடைக்க சாதி வாடை..!!
======
விண்ணில் பறக்க இறகு
கிடைத்தாலும் உன் ஏளனக் குத்தல்சொல்
மனக்கவலை மூட்டும் சுள்ளி விறகு...!!
======
தீர்க்கமான முன்யோசனை
வாழ்க்கை தடை காய(த்)தை
தகர்க்கும் வெற்றிவேர் வாசனை...!!

--- நாகினி

எழுதியவர் : நாகினி (21-Jun-13, 2:11 pm)
பார்வை : 98

மேலே