கலியுகம்.... இது கலியுகம்....
கலியுகம்.... இது கலியுகம்......
தர்மங்கள் தோற்கும்
அதர்மங்கள் வெல்லும்
நல்லோர்க்கில்லை இனி சுகம்
எங்கும் கிளர்ச்சி...
எதற்கும் எதிர்ப்பு
அமைதிக்கில்லை இனி இடம்...
கலியுகம்... இது கலியுகம்.....
மதவெறி இனவெறி
கலவரங்கள்....
தினசரி நடைபெறும்
நிலவரங்கள்....
கணக்கெடுப்பினில்
எத்தனனை பிணங்கள் - இதனை
தடுத்திட இல்லை
நெறிமுறைகள்....
கலியுகம்... இது கலியுகம்.....
பூமி பிளப்பதும்
புயல் வெள்ளமும்
கடலின் சீற்றமும்
புது யமன்கள்...
இயற்கை நடப்பினில்
அடிக்கடி மரணங்கள்
தடுத்திட இல்லை
உபகரணங்கள்...
கலியுகம்... இது கலியுகம்...
நாளொரு திருட்டு
நடந்திடும் கொலைகள்
விடைபெறும்
எண்ணற்ற உயிர்கள்...
தடை விதித்திட
எவர்க்கும் முடிவதில்லை..
முறையிட இறைவனெதிர்
தோன்றவில்லை...
கலியுகம்.... இது கலியுகம்....
மனிதன் மாறலாம்
இயற்கை மாறலாம்...
இறைவன் மாறுவதில்லை
அவன் விழி செவி
மூடுவதில்லை....
நடந்ததும்... நடப்பதும்...
நடக்க போவதும்
இறைவன் விதித்த விதிகள்
கலியுகம் முடிந்திட
புதுயுகம் பிறந்திட - தினம்
இறைவன் இயக்கிடும் கதைகள்...
- இவை
கலியுக வாழ்வின் நிஜங்கள்...
என்று முடியும் இந்த கலியுகம்???...
என்று விடியும் இங்கு புதுயுகம்???...
அன்று வேண்டுவோம் ஜனனம் - இனி
அமைதி வேண்டுவோம் தினம்... தினம்