தம்பி உனக்காக
வரவுகள் இன்றி செலவுகள்
செய்தால் துன்பம் வந்து சேரும்
இன்பம் துலைந்து போகும்
இது வாழ்க்கை கணக்கு
இதை அறிந்து கொண்டால்
நன்மை உண்டு உனக்கு
எறும்பை போல சுறுசுறுப்பாய்
தரணி எங்கும் சென்றிடு
செல்வம் யாவும் சேர்த்திடு
சோம்பல் ஆடை களைந்திடு
சிறுக சிறுக சேமித்து
சிறப்பாய் நீயும் வாழ்ந்திடு
ஆரோக்கியமாய் வாழ
ஓடியாடி விளையாடிடு
ஓய்வு கொஞ்சம் எடுத்திடு
அன்னையை நீயும் வணங்கிடு
தந்தையின் பேச்சை கேட்டிடு
ஆசானை நீயும் மதித்திடு
தோழனை அணைத்திடு
தோல்வியை விரட்டிடு
திசை எட்டும் சென்றிடு
தமிழன் என்று சொல்லிடு
மொழியை நீயும் காத்திடு
வெற்றி வாகை சூடிடு
-கோவை உதயன்