ஏனிப்படி?

பசியில் துடிக்கிறேன்
விவசாயம் போதிக்கிறார்கள்.

தாகத்தால் துவள்கிறேன்
கிணறு தோண்டச்
சொல்கிறார்கள்.

வெயிலில் வேகின்றேன்
மரம் வளர்
என்கிறார்கள்.

குளிரால் நடுங்குகிறேன்
கம்பளி நெய்தல் பற்றி
பாடம் நடத்துகிறார்கள்.

ஏனிப்படி?
என் வேதனைகள் பொய்யோ?
அன்றி
உடனே உதவும் மனம்
இங்கெவர்க்குமில்லையோ?

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Jun-13, 2:52 pm)
பார்வை : 120

மேலே