நினைவுகள் - சிறுகதை

ஏலே எந்திரி குமாரு.......மணி எட்டாவுது......காலேஜி இருக்குல்லே.......குளிச்சி ரெடியாவுல.....சீக்கிரம் சீக்கிரம்........

அடுப்பங்கரையிலிருந்து அவனை அவசரப் படுத்தினாள் அம்மா....!!!

காமாட்சி.....அந்த சோம்பேறி இன்னும் எந்திரிக்கலையா ? அவன் எங்கன உருப்படப் போறான் ? எனக்கு ஆபிஸ் நேரமாச்சி நான் கிளம்புறேன்

என்று சொல்லியபடி விஸ்வநாதன் - அவனது அப்பா வேலைக்கு சென்று விட்டார்.....

அம்மா அவசரத்தோடு கத்தியதும் - அப்பா சோம்பேறி என்று திட்டுவதும் வாடிக்கை என்பதால் இன்னும் நன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டு தூங்கினான் - குமார்....!!!

அம்மா போயிட்டு வாரேன் - என்று பக்கத்து வீட்டு சாந்தியின் சத்தம் கேட்டதுதான் தாமதம் தடால் புடால் என்று பல்லு கூட வெளக்காம டிரஸ் மட்டும் மாத்திக்கிட்டு ரோட்டுக்கே வந்துட்டான் குமார்....

டேய் டேய் எங்கடா போறே ? காமாட்சி கத்த......

அம்மா காலேஜிக்கு நேரமாச்சிம்மா - என்றபடி விறு விறு என்று நடக்கலானான் குமார்......

இது நடந்து ஒரு இருவது வருடம் இருக்கும்....!!!

மாலினி சீக்கிரம் சாப்பாடு வைமா......பேக்டரியிலே பஞ்ச கார்டு சிஸ்டம்.....ஒரு நொடி லேட்டுன்னா அரை நாள் சம்பளம் கட்டு - அவசரப் படுத்தினார் குமார் தன் மனைவி மாலினியை....!!!

சாப்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு அரக்கப் பறக்க ஓடி சரியான நேரத்தில் பஞ்சிங் செய்தார் குமார்........

அப்பாடா.......பெருமூச்சு விட்ட படி அந்த பஞ்சின் மெசினை பார்த்த குமாருக்கு.......

ஏனோ அந்த பக்கத்து வீட்டு சாந்தியின் நினைப்பு வந்தது.......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Jun-13, 4:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 224

மேலே