இலவசம் - சிறுகதை

லக்ஷ்மி அக்கா - அந்த மினிஸ்டருக்கு நாளன்னிக்கு பொறந்த நாளாம்.....இலவசமா எல்லாருக்கும் சீலை வேஷ்டி சட்டை கொடுக்குராராம்......நாமளும் போயி வாங்கிக்கினு வந்துருவோமா...?

குடிசையிலிருந்து வெளிவந்தபடி ஆவலோடு கேட்டாள் குப்பாயி....!

எண்ணை படாத அவள் தலையும், நைந்து போன ரவிக்கையும், மூக்கு ஒழுகுகியபடி இடுப்பில் இருக்கும் குழந்தையும், சுய நினைவில்லாமல் குடித்தபடி திண்ணையில் கிடக்கும் கணவனும் ---- இப்படியாக குப்பாயியின் நிலைமையை சொன்னால் கேட்கும் எவருக்கும் கண்ணில் ரத்தம் வரும்....!!!

ஏழ்மை......மிகக் கொடிய நோய்.....!!!

இலவசம் - குப்பாயியை பொருத்தவரை அதை தீர்க்கும் மருந்து....!!!!

அதுல்லாம் வேணாம் குப்பாயி....நாம பாடுபடுறோம் ஏதோ வர்ற காசுல கூழோ கஞ்சோ குடிச்சு வாழ்க்கைய ஓட்டுறோம் - அந்த இலவச கருமாந்திரம் எல்லாம் எனக்கு வேணாம் - நீ வேணா போயி வாங்கிட்டு வா - என்றபடி லக்ஷ்மி தனது வேலையை தொடர்ந்தாள்.....

குப்பாயி நாளை மறுநாள் எப்போது வரும் என்று தவமாய் கிடந்தாள்......இரவெல்லாம் தூக்கமே கிடையாது......முதல் ஆளாய் ஓடிப் போய் சீலையும் சட்டையும் வாங்கி விட வேண்டும்....இல்லா விட்டால் தீர்ந்து விடும்.......குழந்தை வேறு பணியில் சளி பிடித்து இருமிக்கொண்டு.....இவனை யாரிடம் விட.......என்று பலவாறு கணக்கிட்டபடி இருந்தால் குப்பாயி........

அப்படி இப்படியாக அந்த நாளும் வந்தது.....

அதிகாலையிலேயே......விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.......

இலவசம்......பெற்றே தீர வேண்டும் என்ற ஆவேசம்

மிக விரைவாக ஓடுகிறாள்....குப்பாயி......

குறுகிய சாலை திருப்பத்தில்......மூடப் படாத அந்த பாதாள சாக்கடையில்.....இருட்டில் சரியாக கண்கள் தெரியாமல் விழுந்து விடுகிறாள்......

அடுத்த சில மணி நேரங்களில் அவளது உடலை வெளியே எடுக்கிறார்கள்.......

இலவசமாக கோடித் துணி போட்டு மூடிபட்டபடி
இறந்து கிடக்கிறாள் குப்பாயி......

அவள் கேட்ட இலவசம் இப்போது கிடைத்து விட்டது

அதனால் யாருக்கு லாபம் ?

அவளது கணவன் வழக்கம் போல் குடித்தபடி....

குழந்தை இன்னும் உறங்கியபடி.....
விழித்தால் என்ன செய்யுமோ பாவம்.....

இலவசம் - குடியை கெடுக்கும்....!!!!

எனவே உழைத்து சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை முதலில் கொள்வோம் - உழைப்போம் - உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு....!!!

கதை
வசனம்
டைரக்சன்
இசை

ஹரி

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Jun-13, 12:17 am)
பார்வை : 205

மேலே