பயம் ........!

மாறி மாறி அடிக்கும் அலை போல

தூங்க மறுக்கிறது மனம் ...!



வயது ஏற ஏற ...தோன்றும்

எண்ணங்களும் மாறித்தான் விடுகிறது ...!

நினைவுகளில் வாழும் இலட்சியங்கள்

கனவுகளில் கூட சாதிக்க முடியவில்லை ...!



அதிகார வர்க்கம் ...ஆட்களின் பலம் ...

இவற்றுக்கு முன்னால் ...

நடுத்தர வர்க்கம் ...

அடங்கித்தான் வாழவேண்டியதிருக்கிறது ...

இலட்சியங்களை சாதிக்க முடியாதபோது ...

இலட்சங்களை அடைவது எப்படி ...!



சொந்த வீடு வேண்டுமென ...

தாத்தா ...நினைத்தார்...

அப்பா...நினைத்தார்...

என் மகனும் நினைப்பானோ யென

பயம் மனமெல்லாம் ...!



" படைத்து விட்டேன் ....

மண் ,பொன் ,பெண்ணாசைகளோடு ,

நல்லவனாய் வாழ்வது உன் பொறுப்பு "

இது படைத்தவனின் கூற்று ...!



சுகங்கள் அறியாத போது ...

அன்பே வாழ்க்கையாயிற்று ...!

அறிந்த பின் ...

அண்ணன் கூட அந்நியனானான்...

பங்காளி ...பகையாளியானான் ....

பாசங்கள் பணத்தினால்

சண்டை போட்டுக் கொண்டன ...!



"இவ்வளவு பணம் கொடுத்தால்

மரணம் இல்லை "யென்றால்

மனிதனின் முதல் வருமானம்

அதுக்காகத்தான் இருக்கும் ...!



மரணம்...

எல்லாவற்றுக்கும் விடுதலை ?

பாசமுள்ளவனுக்கு ..

மரணம் கூட பயம்தான் ...!



இந்த மரண பயம்தான்

சில நேரமாவது ...சில நொடிகளாவது ....

மனிதனை ..மனிதனாக வாழ வைக்கிறது ...!

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (23-Jun-13, 6:18 pm)
பார்வை : 143

மேலே