என் விடியலை காணவில்லை
என் விடியலை காணவில்லை
நான்
விழித்தெழுந்தபோது
விடிந்திருந்தது பொழுது
எத்தனையோ சேவல்கள்
இரவில் உறங்காமல்
விடிந்தபின்
படுக்கைக்கு பயணித்தன
என்முகம் பார்த்து பல நாள்
ஆனாலும்
மறக்கவில்லை மூளை
சோம்பளின்போதும்
கடைசியாய் பார்த்தபோது
உதட்டினோரம் ஓர் சிரிப்பாய்
கண்ணோடு நோக்கி
கண்ணாடி நலன் விசாரித்தது
பற்பசை பட்டினிகோலத்தில்
வயிறு உள்நோக்கிரிந்தது
அதை மேலும் பசியாக்கி
-நானும் பசியாற
பல் துலக்கினேன்
காய்ந்த சருகைப்போல்
தலைமுடிகள்
எண்ணெய்க்கு தவம்
-அடுப்பிலே பூனைகளும்
ஒவ்வாத உணவென்று தெரிந்தும்
வயிறு சம்மதிக்க தயாராய் இருந்தது
விழிங்கிய உணவு
இரப்பையை அடையுமுன்
வீட்டின் வெளியே
அவசர சத்தத்துடன்
தொழிற்சாலை பேருந்து
பல லட்சம் கனவுகள்
வாயிலை கடக்கும்
சில நொடிகளில்
வரிசை பட்டியலின்
முதலில் நிற்பவை
முதலொன்று -உயிர்
நண்பனின் வட்டியுடன் கடன்
பெட்டிக்கடை கணக்கடைப்பு
இரண்டமாய்
அடுத்தடுத்து
ஒப்படைப்புகளுக்கு
மத்தியிலே
ஆசையாய் சேர்த்து வைத்த
பண(மன) கணக்கு
அடுத்த வருடம்
நானும் வாங்கிடுவேன்
நிச்சயமாய் என் அறையை நிரந்தரமாய்
இப்படிதான் நினைத்திருந்தேன்
கடந்துவிட்ட பல வருடங்களாய்
மீண்டும் ஒருமுறை
நினைவு திரும்பியது
நிகழ்காலம் நோக்கி
அவன் கொடுத்த அடுத்த சத்தத்தில்....