.............நகங்கள்...........

வெட்டிஎறியப்பட்ட நகங்களில்,
திட்டுத்திட்டாய் அழுக்குகள் !
அது பார்த்து சுத்தமாகிவிட்டதாய்,
நெட்டி முறிக்கும் மனம் !
சற்று யோசிக்கலாம்.............
உள்ளூரத்தங்கிய அழுக்குகளையும்,
அப்புறப்படுத்தி அகமும் அழகாக !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Jun-13, 9:31 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 58

மேலே