.............உரிமையாளர்கள்............

நீ நின்று நடந்த பாதைதனில்,
சென்றுகொண்டிருந்த பல,
சின்னச்சின்ன ஜீவராசிகள் !
மிதிபட்டு வதைப்பட்டது உன்னால் !
மதிநுட்பம் கொண்ட மனிதா !!
அறியாமல் எடுக்காதே உயிர்களை !
கொஞ்சம் தடம்பார்த்து நட !
இல்லையெனில்,
கொலைகாரனாய் கருதப்படுவாய் !
அவர்களாலும் உன் உள்மனத்தாலும் !
காரணம்,
அவர்களும் இம்மண்ணின் உரிமையாளர்களே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Jun-13, 9:33 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 45

மேலே