இந்தியா உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடு - சொல்கிறார் ஜான் கெரி...! உண்மையா..?
மூன்று நாள் சுற்றுப்பயணமாக அல்ல... பல ஒப்பந்தங்கள் போட்டு, இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுக்களை அப்படியே டாலராக மாற்றிக் கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இவ்வாறு இன்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஜான் கெர்ரி மட்டும் அல்ல... கடந்த முறை வந்த ஹில்லாரி கிளிண்டன் முதல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரை இந்தியா வந்து தனது முதல் காலடியை வைத்தவுடன் இவ்வாறு சொல்வதை ஒரு சடங்காக வைத்துள்ளார்கள்...? என்று கருதலாமா...
உலகிலேயே மிகப் பெரும் ஜனநாயக நாடு...பின் எப்படி காவிகளின் இந்துத்துவா நாடாக மாறியது...?
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் எப்படி உலகிலேயே எங்கும் நடக்காத அளவிற்கு ஊழலும் கறுப்புப் பணமும் இருக்கிறது...? சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் ஊழல் மற்றும் கறுப்புப் பணமாக இருக்கிறது என்று ஊடகங்கள் சொல்லுகின்றனவே ...?
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் எப்படி மதக் கலவரம் நடக்கிறது...? ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும்...பெண்கள் குழந்தைகள் கற்பழிப்பும் கொலையும் நடக்கிறது..?
குண்டு வைத்தவுடன் அல்லது வெடித்தவுடன் அல்லது அப்படி ஒரு கடிதம் வந்தவுடன் நொடிப்பொழுதில் எவ்வாறு இஸ்லாமியர்களை வேட்டை ஆடுகிறது அணைத்து மாநில போலீஸ்- ம்..? டிவிக்களும் மீடியாக்களும் எப்படி கையை சுட்டுகிறார்கள் இஸ்லாமியர்களை நோக்கி...! இவர்கள் தான் காரணம் என்று...!
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் பெண்கள் கற்பழிப்பு மிக அதிக அளவில் ஏன் இருக்கிறது.
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் ஏன் ஆயுத சிறப்புச் சட்டம் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருக்க வேண்டும். காஷ்மீர் மற்றும் அணைத்து வடகிழக்கு மாநிலங்களில்...
தற்பொழுது தேசிய பாதுகாப்பு ஒன்றியம் ஏன் தேவைப்படுகிறது..?
ஆக, எது உண்மை... எது பொய்..? பொய் என்றால் ஏன் அமெரிக்கா பொய் சொல்கிறது...? என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்...!
சங்கிலிக்கருப்பு