பிசி(விடுகதை)
விடுகதைகள்
விடுகதை என்பது விடுவிக்கவேண்டிய புதிர், ஒரு சில வரிகளில் ஒரு பொருளை மறைபொருளாக (நேரடியாக அதை விளக்காமல்) விவரித்து தொடுக்கப்படுவது.
கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை.
யோசிக்க வைப்பது இதன் நோக்கம்.
நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி
விடுகதையை விரும்பாதவர்களே இருக்க முடியாது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பக்கூடியது.விடுகதையை ஒரு இலக்கியமாக கொண்டு போற்றப்படுகின்றது.தொல்காப்பியர் விடுகதையைப் பிசி என்று கூறுகின்றார்.இப்படி அறிவுக்கு விருந்தாக அமையும் விடுகதை இன்று அருகி வருகின்றது.
இதோ சில விடுகதைகள்...
1. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை அது. ஆனால் தேசமெல்லாம் சுத்தும்?
2. மின்னல் மின்னும்,இடியும் இடிக்கும் . ஆனால் மழை பெய்யாது- அது என்ன?
3. ஒரு நெல் எடுத்துக் குத்தினால் வீடு முழுதும் பொரி – இது என்ன?
4. ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?
5. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன?
6. சூரியரே சந்திரரே, மந்திரி மகளை பாரு.. அவள் என்ன சாதி? அறுத்து கட்டுகிற சாதி.
கோட்டைக்குள்ளே போனால் குத்துப்பட்டு சாவாள்?
7. நட முடியும். ஆனால் புடுங்க முடியாது?
8. கனங்களமரத்தில் ஏறுமாம் மயில்
கையினால் குத்துப்பாட்டு சாகுமாம் மயில்
கலிங்கஞ்சோறு தின்னுமாம் மயில்
புறக்கடையில் இழுப்பட்டு கிடைக்குமாம் மயில்?
9. கல்லுறங்கும் புல்லுறங்கும் கானமயில்லுறங்கும்
கண்கள் இரண்டு மட்டும் கடைசி வரை உறங்கவில்லை?
10. காசு போல் இலையுண்டு
கவரி போல் பூ உண்டு
காயுண்டு பழமில்லை?
விடுகதைகள் சிந்தனைக்கு விருந்தாவும்,நகைப்பிற்குக் களமாகவும் விளங்குகின்றன.இவ்விடுகதையில் உயர்ந்த வேதாந்த கருத்துக்கள் தொடங்கி எளிய உலக வாழ்க்கைப் பொருள் வரையிலும் இடம்பெற்றிருக்கும்.