ஆயிரம் பிரச்சினைகள்

தந்தை ஒருவர் தன் மகள் அறையை கடக்கும் போது,
அறை நிசப்தமாக இருந்தது
எல்லாம் உரிய இடத்தில் மிகதுரிதமாய் இருந்தது
அங்கே படுக்கையின் மேல் ஒரு மடிக்கபடாத கடிதம், நடுங்கிய கைகளுடன் அதை எடுத்து பயத்துடன் படிக்க ஆரம்பித்தார்

அதில் இப்படியாக எழுதியிருந்தது

"அன்புள்ள அப்பாவிற்கு,
உங்கள் மகள் அன்புடன் எழுதும்
கடைசி கடிதம்

நீங்கள் இந்த கடிதத்தை படிக்கும் நேரம்
நான் என் காதலனுடன் இருப்பேன்

அவன் மிகவும் நல்லவன்
அவனுக்கு வயது 45
எனக்கு 15 , இருந்தாலும் இந்த காலத்தில் வயதொன்றும் பெரிய விஷயமல்ல
ஏற்கனவே ஏழெட்டு மனைவி இருந்தாலும்
என்னை நன்றாக பார்த்துக்கொள்வான்
அவன் காட்டில் கஞ்சா பயிரிடுகிறான்
அதை விற்று எங்கள் வாழ்க்கையை நடத்துவோம்
நான் அவனுடன் செல்ல வேறோரு காரணம்
நான் மூன்று மாத கற்பம்,
சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க கடவுளை வேண்டுகிறேன்
ஆம் அவனுக்காக,
அவன் நிறைய கொலைகளில் சம்பந்தபட்டிருப்பதால்
அவன்மீது மரண தண்டனை பதிவாகியுள்ளது,
இருந்தாலும் சிறையிலிருந்து தப்பிவிட்டான் ,
அவனுக்கு ஒரு கை இல்லாவிட்டாலும்
என்னை கண்கலங்காமல் வைத்திருப்பான்,

நிச்சயம் நான் திரும்பி வரமாட்டேன்
என்னை மன்னித்துவிடுங்கள்
இப்படிக்கு உங்கள் அன்பு மகள் "

இதை படித்த தந்தைக்கு மாரடைப்பே வந்துவிடும்போல் இருந்தது .

கடிதத்தின் கடைசி வரிகளில் " பின்புறம் படிக்கவும் "

பின்புறம் இவ்வாறு எழுதியிருந்தது

முதல் பக்கம் அத்தனையும் பொய்

உண்மைஎன்னவென்றால்
நான் இந்தமுறையும் கணக்கு பாடத்தில் தோல்வி அடைந்துவிட்டேன்;
என் தேர்வு அட்டை மேஜை மேலுள்ளது ,
நான் பக்கத்துக்கு வீட்டு அத்தையுடன் இருக்கின்றேன்
கோபம் தீர்ந்ததும் அழையுங்கள்


நீதி : வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் வர்ணம் பூசிக்கொண்டு வடிவம் மாற்றிக்கொண்டு திரிகிறது .
நமக்கு ஏற்படும் எல்லாமே மிக சிறிய பிரச்சனைகளே

எழுதியவர் : ANBARASAN (25-Jun-13, 10:23 pm)
சேர்த்தது : ANBARASAN R
பார்வை : 191

மேலே