காதல் துளிர்

ரோஹினி இருபது வயது பெண்.கல்லூரியில் இளம்அறிவியில் முன்றாம் ஆண்டு படிக்கிறாள்.அத்தை மகளின் திருமணத்திற்கு செல்ல வேண்டிஇருந்தது.அவளுக்கு போக விருப்பம் இல்லை.காரணம் அத்தை மகன் வருண்.வருண் அவளை விட நான்கு வயது பெரியவன்,பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தான். வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தன் அப்பா உடன் வேளைக்கு செல்ல ஆரம்பித்து, கடுமையாக உழைத்து சொந்தமாக ஒரு கடை வைத்துவிட்டான்.அவளின் அத்தைக்கு ரோஹிணியை தன் மருமகளாக ஆக்கிக்கொள்ள ஆசை இருந்தது. தன் அண்ணனிடம் பெண் கேட்டபோது அவர் பெண்ணிற்கு படிப்பு முடியட்டும் என சொல்லிவிட்டார். இது ரோஹினிகும் தெரிந்ததுதான்.இப்போது போனால் என்ன நடக்குமோ? என்ற பயம் தான் அவளுக்கு இருந்தது.

ஏனோ அவளுக்கு வருணை திருமணம் செய்ய விருப்பம் இல்லை.திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பாக அவளும், அப்பாவும் சென்றனர்.இரவு தான் வந்திருந்ததால் உறங்க சென்றுவிட்டாள். இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்பு பார்த்ததுதான், இனிதான் பார்க்க போகிறார்கள்.வருணும், ரோஹினியும் அப்போதுதான் பார்த்தார்கள் . இருவருக்கும் பிடித்திருந்தது.அத்தை அங்கு உள்ள அனைவரிடமும் அவளின் படிப்பு முடிந்தவுடன் வருணுக்கு ரோஹினிக்கும் திருமணம் என்றே சொல்லிகொண்டிருந்தார்.அந்த இரண்டு நாட்கள் அவர்களுக்குள் காதலை மாற செய்திருந்தது.

திருமணம் முடிந்து கிளம்பும்போது, வருணை காணாமல் ரோஹினி தேடிக்கொண்டு இருந்தாள்.பேருந்தில் ஏறும்போது வருண் வந்தான்.ரோஹினி,வருண் வாய் திறந்து பேசாவிட்டாலும்,இருவரின் மனமும் பேசிக்கொண்டுதான் இருத்தன.எப்படியும் வருணை தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று ரோஹினியும்,ரோஹிணிதான் தன் மனைவியாக வர போகிறாள் என்று வருணும் அமைதியானார்கள்.

அவளுக்கு வருணை பார்க்கவேண்டும் என தோன்றினாலும், அவள் வருணுக்கு தெரியப்படுத்தவில்லை.படிப்பு முடிந்து தேர்வு முடிவுக்கு காத்திருந்தபோது ரோஹினியின் தந்தை காலமானார். வருண் வரவில்லை:அத்தை மட்டும் வந்திருந்தார்.அவள் தன் தங்கை ,தம்பி இருவரையும் கவனிக்கும் பொறுப்பு அவளிடம் வந்தது. அத்தை,வருண் இருவரும் வருவார்கள் என நினைத்திருந்தாள்.ஒரு திருமணத்திற்கு சென்றபோது, அவளின் பெரியம்மா பெசிகொண்டு இருந்தார் அதை ரோஹினி கேட்டாள். வருணுக்கு திருமணம் ஆகிவிட்டது. ரோஹினியின் தந்தை இறந்தவுடன் அத்தை மனம் மாறி வேறு ஒரு பெண்ணை பார்த்து முடித்துவிட்டாள். ரோஹினிக்கு புரிந்தது வருணை நினைத்து கொண்டு இருப்பதில் நியாயமில்லை. இனி தன் தம்பி,தங்கை முன்னேற்றமே முக்கியம் என்றும், வரும் காலம் நம் வாழ்வை சரியான துணையுடன் அமைக்கும் என முடிவெடுத்தாள்.

எழுதியவர் : vaishu (25-Jun-13, 7:36 pm)
சேர்த்தது : vaishu
Tanglish : kaadhal thulir
பார்வை : 268

மேலே