சிவா சொல்லும் பேய்கதை

அன்று ஒரு நாள் இரவு என் வாழ்கையில் மறக்க முடியாத இரவு எனக்கு அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை இல்லை ஆனால் அன்று நான் அமானுஷ்யத்தை நம்பும் தருணம் வந்தது .நான் ஒரு ஓவியன் எனது பெயர் சிவா சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம் என் கண்ணில் பட்ட படங்களை வரைவேன் .அன்று ஒரு நாள் ஒரு நாள் ஒரு கிழிந்த செய்தி தாளில் ஒரு குழந்தையின் படம் கண்டேன் ஆனால் அது என்ன செய்தி என்று எனக்கு தெரியவில்லை காரணம் அந்த தாள் கிழிந்திருந்தது அன்று மதியம் அந்த குழந்தையின் படத்தை வரைந்து ஒரு குட்டி தூக்கம் போட ஆரம்பித்தேன் .தூக்கம் விழிந்து எழுந்ததும் அந்த குழந்தையின் படம் காண வில்லை .காற்றில் பறந்து போயிருக்கும் என்று விட்டுவிட்டேன்.அன்று இரவு 11.35 மணிக்கு எதோ அழுகுரல் கேட்டது ஒரு குழந்தையின் குரல் போல கேட்டது .எனக்கு வெளிய போக வேண்டுமென்று தோணவில்லை காரணம் என் அன்னை என்னை சிறு வயதிலிருந்தே இரவு நேரங்களில் தனியாக வெளியில் எங்கும் செல்லாதே என்று .இருந்தாலும் அந்த குழந்தையின் குரல் என் தூக்கத்தை களைத்தது..படுகையில் இருந்து எழுந்து கதவை திறந்து வெளியில் சென்றேன். என் வீட்டு மொட்டை மாடியில் அந்த அழுகுரல் கேட்டது .நான் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது ஒரு மூலையில் அந்த குழந்தை முகத்தை மறந்தி கொண்டு அழுதுகொண்டிருந்தது அந்த குழைந்தையின் கையில் ஒரு கத்தி அதில் ரத்த கரை படிந்திருந்தது .எனக்கு அந்த குழந்தையின் அருகில் செல்ல பயமாக இருந்தது இருந்தாலும் அந்த குழந்தையின் குரல் என் மனதை உருக்கியது .அந்த குழந்தையின் அருகில் சென்றேன் .அது ஒரு பெண் குழந்தை வயது 7 இருக்கும்..அவள் அருகில் சென்று "பாப்பா பாப்பா யாரு மா நீ ஏன் அழுகுர காலையில் இருக்கும் கத்தியை கீழ போடு என்றேன்.அந்த குழந்தை நான் சொன்னதை கேட்காமல் மறுபடியும் அலுத்து கொண்டிருந்தது .பிறகு அவள் கையில் இருக்கும் கதியை பிடுங்கி கிழ எறிந்தேன்.அப்புறம் அந்த குழந்தையின் முகத்தை தூக்கி பார்த்தேன் முகம் முழுவதும் காயம் கை கால்களில் கூட காயம் பாவம் அழகிய முகத்தில் தழும்புகள் விழுந்திருந்தன அந்த பிள்ளைக்கு நான் அவளை பார்த்த வுடன் என் மனம் உருக்கியது எதுவும் கேட்க தோன்ற வில்லை .அவளிடம் அழாதேட அம்மு அண்ணன் இருக்கிறேன் என்று அவளை தூக்கி கொண்டேன் நீ யார் எங்கிருந்து வந்தாய் என்று நான் கேட்க அவள் எதுவும் சொல்ல வில்லை .சாப்பிட்டியா என்று கேட்டேன் அவள் எதுவும் சொல்லவில்லை நன் உடனே என் அறைக்கு கூட்டி சென்று ஒரு தட்டில் சாப்பாடு போட்டு அவளுக்கு கொடுத்தேன் அவள் வேகமாக சாப்பிட்டால் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது பாவம் இந்த குழந்தை சாப்பாடு கொடுக்க கூட ஆள் இலாததல் எங்கிருந்தோ ஓடி வந்திருகிறது என்று .அப்புறம் அவளிடம் அம்மு போதுமா சாப்பாடு என்று கேட்டேன் அவள் ஏதும் சொல்ல வில்லை நான் தட்டை எடுத்தும் அண்ணா இன்னும் கொஞ்சம் போடுங்க சாப்பாடு என்றால் நான் சிறிது கொண்டே அவளுக்கு சாப்பாடு வைத்தேன். அவள் சாப்பிட்டு முடித்ததும் யாரு த அம்மு நீங்க என்ன ஆச்சு ஏன் வீட்ல இருந்து ஓடி வந்துட்டீங்க என்று கேட்டேன் .அதற்கு அவள் அண்ணா என் பெயர் விசாலி எனக்கு அம்மா அப்பா இல்ல எனோட சித்தப்பா வீட்ல தன இருந்தேன் ஆனா அவரு என்ன அடிச்சிகிட்டே இருப்பாரு என்ன யார்கிட்டேயும் பேச விடமாற்று நான் யாரிகிட்டயாச்சு பேசுன அவங்ககிட்ட சண்ட போடுவாரு அப்புறம் என்ன ரூம் கு கூட்டிட்டு போய் அவர் பெல்ட் ஆல என்ன அடிப்பாரு வலிக்கும் அண்ணா பாருங்க என்ன எபடி அடிசிருக்கரு என்று சொல்லி அவள் முத்திகை காட்டினால் அந்த சின்ன குழந்தையின் முதுகு முழுவதும் கோடு கோடாக காயங்கள் ..அண்ணா ஒரு நாள் என் பாகத்து வீட்டு அன்ன கிட்ட பேசுனேன் அதுக்கு என் சிட்ட்தபா அந்த அண்ணா வை மோசமா அடிச்சிட்டாரு என எங்கேயும் வெளிய போக விடமாட்டாரு நான் வீட்டு விடு வெளிய போகலாம்னு நினச்சா கூட அவர் என்ன கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அடிப்பாரு அண்ணா என்று அலுத்து கோடு கொண்டே என்னை கட்டி அணைத்து கொண்டால் என் கண்களில் கண்ணீர் வந்தது இந்த சின்ன குழந்தை இவ்வளவு கொடுமைகளை அனுபவிதிரக்கிறதா என்று மனம் நொந்து போனேன் .அப்புறம் இனிமேல் இந்த அண்ணா இருக்கிறேன் உனக்கு என்னிடமே இரு அம்மு உன் சித்தப்பா விடம் உன்னை விட மாட்டேன் என்று சொல்லி அவளை என் மார்பில் படுக்க வைத்து தாடி தூங்க வைத்தேன்.அபடியே நானும் தூங்கினேன்.மறுநாள் எழுந்து பார்த்தேன் அந்த குழந்தை காண வில்லை ..மொட்டை மாடியில் சென்று பார்த்தல் நான் வரைந்த ஒரு குழந்தை ஓவியம் தாள் மட்டும் இருந்தது .அப்புறம் அன்று இரவு அந்த குழந்தையை நினைத்து கொண்டே இருந்தேன் தூக்கம் வரவில்லை. ஒரு செய்தி தாள் என் வீடு ஜன்னலை மாடி கொடிருப்பதை கண்டேன் அந்த தாளை எடுத்து பாரத்தால் நேற்று நான் கண்ட அந்த குழந்தை இறந்து போனதாக அந்த செய்தி தாளில் இருந்தது மேலும் அந்த குழந்தை அவள் சித்தப்பா வை கத்தியல் குத்தி கொன்றதாகவும் அவளை அவள் சித்தாப்பா மாடியில் இருந்து கிழே தள்ளி விட்டதால் அவள் இறந்தால் என்று இருந்தது .இந்த செய்தியை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன் .அன்று மீண்டும் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது நான் பயந்து கொண்டே மொட்ட மடிக்கு சென்றேன் "அண்ணா இங்க வாங்க "என்று கூப்பிடும் சத்தம் கேட்டது நான் அவள் அருகில் சென்றேன் அவள் அழுதுகொண்டே அண்ணா நான்
சொன்னேன்ல உங்ககிட்ட என் சித்தப்பா நான் இருக்குற இடத்த கண்டு பிடிச்சிட்டாரு அலுத்கொண்டே சொல்ல அதிர்ச்சியுற்ற நான் உன் சித்தப்பா எங்கே என்று கேட்க அவள் உங்க பின்னடி தன நிக்குறாரு என்று சொல்ல நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க ரத வெள்ளத்துடன் ஒரு பெல்ட் ஐ கையில் ஏந்தி கொண்டு ஒரு உருவம் நின்றது .பிறகு காலை 6 மணி அளவில் நான் எழுந்து பார்த்தல் நான் மொட்டை மாடி படிக்கட்டில் விழுந்து கிடந்தேன் மேலும் என் முதுகில் பெல்ட் ஆல் அடிக்க பட்ட காயம் இருந்தது .இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பு அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு நம்பிக்கை வந்தது அனால் ஒன்று மாட்டும் உண்மை இனிமேல் இரவில் அழுகுரல் கேட்டல் எழுந்து போக மாட்டேன்.. ஏன் இரவில் பகலில் அழுகுரல் கேட்ட கூட போக மாட்டேன்.. நான் பட்ட அனுபவம் போதும்...(siva)


என்ன வாசகர்களே சிவா சொல்லும் பேய்கதையை கேட்டீங்களா???? AMANUSHYAM என்பது என்றும் புரியாத ஒன்று... அதை அறிந்து கொள்ள முற்படாதீர்கள்.. அடுத்த KADHAYIL SANTHIPPOM

IVAN
NAA.RAAMKUMAR

எழுதியவர் : நா. Raamkumar (26-Jun-13, 1:21 am)
சேர்த்தது : Naa.Ramkumar
பார்வை : 1022

மேலே