ஒரு கண் ஒரு கை
நாணத்தில் நங்கையவள் நகைக்கிறாள்
ஒருகை மூடி ஒருகண்ணில் பார்க்கிறாள் !
அளவான நகையுடன் அழகுடன் சிரிக்கிறாள்
அலங்காரம் கையிலே அடக்கம் முகத்திலே !
மெகந்தியில் வரைந்த ஓவிய விரல்கள்
மேகத்தில் ஒளிந்த காவிய நிலவவள் !
வண்ணமிகு வானவில் விழியில் தெரிகிறது
எண்ணத்தின் ஏக்கம் பார்வையில் புரிகிறது !
மங்கைக்கு அழகே மாசில்லா புன்னகை
வாழ்வில் அதுவே காசில்லா பொன்னகை !
நிறைவேறும் அவள் இதயத்தின் வேட்கை
நிச்சயம் பெறுவாள் வீரமுள்ள வேங்கையை !
பழனி குமார்