இறைவனின் நகல் நி
பத்துமாதம் எனை சுமந்த தாயே
கருவை சுமக்கையிலே எனைகொஞ்சினாய் நீயே
அளவறிந்து ஆகாரம் உண்டு
தொப்புள் கொடிஉரவில் உயிர்செர்த்த தாயே
மண்பார்க்க நான் பிறக்கும் நொடியில்
நி மறுபிறவி எடுக்கின்றாய் தாயே
பத்தியமாய் நீயுட்டும் பாலில்
பாதி உயிரையுமே சேர்த்துட்டும் தாயே
ஆபரணம் பலனூரு அணிந்து
என்னை அழகாக்கி பார்க்கின்ற தாயே
உறைபணியில் குளிரில்னான் நடுங்க
சேலையில் உடல்போர்த்து உடலணைக்கும் தாயே
அச்சத்தில் அழுதிடும் நான் சிரிக்க
அழுதுகொண்டே சிரிக்கின்ற தாயே
ஆபத்து எனக்கொன்று நேர்ந்தால்
முதலில் ஆவியையும் விடுவிப்பவள் நீயே....