அன்பு வாங்கு...

இரவுகளை கீறுகின்ற
விட்டில்கள்
ஒளிவாங்கு........

இலையின்மேல் உறங்குகின்ற
பனித்துளிகள்
நுரைவாங்கு............

வண்டுகளை தாங்குகின்ற
மலர்களின்
பலம்வாங்கு................

மேலிருந்து விழுகின்ற
அருவிநீர்
உடல்வாங்கு..............

மேடையின்றி பாடுகின்ற
குயில்களின்
இசைவாங்கு....................

காற்றினை இசைக்கின்ற
புல்லாங்குழல்
துளைவாங்கு.............

மேகத்திடம் மழைவாங்கும்
குளிர்காற்றின்
தவம்வாங்கு.....................

பிறந்தவுடன் முலைமுட்டும்
குழந்தைகளின்
ஞானம்வாங்கு................

குரங்காக வாழ்ந்தவனே
மனிதனான
மர்மம்வாங்கு....................

பார்ப்பவர்கள் அனைவரிடமும்
தாயையொத்த
அன்புவாங்கு..................
=============================

எழுதியவர் : பாசகுமார் (26-Jun-13, 10:47 pm)
பார்வை : 90

மேலே