குறுங் கவிதைகள் நான்கு

பழுத்தது இலைகள்
உதிர்ந்தது மலர்கள்
வருந்தவில்லை
கண்ணீர் சிந்தவில்லை
செடிகள் ...!

ஓய்ந்துவிட்டது
நின்று விட்டது
தேடுகிறது தூறல்
மனக் குடை ...!

பசுஞ் சட்டை விரிக்கிறது மரம்
விடுவதாய் இல்லை
பனிக்காற்று பளபளப்பான
இலைகளுக்கு ஏங்கி...!

கதவைத் திறந்தேன் என்னை
அழைக்கின்றது சூரியன்
உன் விழிகளைத் தா என்று ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Jun-13, 11:16 am)
பார்வை : 151

மேலே