செஞ்சோலை (பாகம் -2)

களம் புகுந்த மறவர் பிள்ளையாயினும்
காணி நிலம் உழும் உழவன் பிள்ளையாயினும்
களம் புகுவான் தமிழரென எண்ணியே
கதை முடிக்க எறிகணை துளைக்க
கார்மேகம் சூழ பொழிந்தானே
கருகிட செஞ்சோலை அரும்புகள்
கல்லாக மனம் கொண்டே
சில்லுச் சில்லாக செஞ்சோலை சிதைப்படவே