பூக்களின் கண்ணீர் துளிகள்!!!(தாரகை)
பொம்மைக்கு சோறூட்டுவது போல் விளையாடுகிறது
பசித்த வயிறுடன் குழந்தை.
:(
மலடியின் கருவறையை
தேடுகின்றது
தெருவில் வீசப்பட்ட குழந்தையின் உள்ளம்.
:(
பள்ளியின் மணி ஓசைக்கு
காத்திருக்கிறான்
தின்பண்டம் விற்கும் குழந்தை தொழிலாளி.
:(
மான்குட்டிஎன கொஞ்சுபவனை
சிங்கமாக பார்க்கிறாள்
கற்பழிக்கப்பட்ட சிறுமி.
:(
எடுத்துக் காட்டும் சாக்கில்
விளையாடிப் பார்க்கிறான்
பொம்மைகடை சிறுவன்.
:(
வாடாத மல்லிகையை
வாங்க கெஞ்சினாள்
வாடிய முகத்துடன் பூ விற்கும் சிறுமி.
:(