வாழ்க்கை லிமைரைகூ

இல்லறம் என்பது ஒரு கோயில்
இன்ப துன்பங்கள்தான் வாழ்க்கை
நல்லறமாக்க நோக்கிடு புகழ் வாயிலில் ...!

விண்ணின் வயலில் மண்ணின் பயிர்
பொன்னும் பொருளும் சேர்த்திடும்
புன்னகை வயலில் ஆழமாய் விதைத்திடு உயிர்...!

புலன்கள் உணர்த்திடு மெய்யில்
வாழ்வின் அன்பிலும் பண்பிலும்
பலன்கள் பார்த்திடு கையில்....!

எழுதியவர் : தயா (27-Jun-13, 4:37 pm)
பார்வை : 168

மேலே