படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை !
நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் செல் 9442112288
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மணிமேகலைப் பிரசுரம் ,7.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17.
விலை ரூபாய் 60.
ஸ்ரீ விநாயகா ,சுவாஷ்சிகா பர்னிச்சர் உரிமையாளர் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களின் செல்ல மகள் கவிதா -செல்வன் பி .அரவிந்த் பொன்னையா திருமணம் மதுரையில் நடந்தது .நான் சென்று இருந்தேன் . திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கிய தாம்பூல பையில் இந்த நூல் இருந்தது .உடன் இனிய நண்பர் திரு பி .சுரேந்திரன் அவர்களை செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் .திரு பி .சுரேந்திரன் அவர்கள் கர்மவீரர் காமராஜர் மீது அளவற்ற பாசமும் , நேசமும் கொண்டவர் .காமராஜரை பெரிதும் மதிப்பவர் .பணம் இருக்கும் அனைவருக்கும் இதுபோன்ற மனம் இருப்பதில்லை .5000 நூல்கள் வாங்கி வழங்கிய செய்தி அறிந்து மேலும் பாராட்டினேன் .பணக்காரர்கள் திருமணங்களில் இதுபோன்று நூல் வழங்கும் நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்கலாம் .5000 நூல்களை ஒரு குடும்பத்தில் 5 பேர் வாசித்தால் 25000 பேருக்கும் காமாராஜர் பற்றிய நேர்மை உள்ளம் விளங்கும் .
தேசப்பிதா காந்தியடிகளை " இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் இனி வரும் உலகம் நம்ப மறுக்கும் ." என்றார்கள் .இது தென்னாட்டு காந்தி காமராஜருக்கும் அப்படியே பொருந்தும் .அதனை மெய்ப்பிக்கும் நூல் இது .நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் அவர்களுக்கும் நூலை மிகத்தரமாக பதிப்பித்த மணிமேகலைப் பிரசுரத்திற்கும் பாராட்டுக்கள் .
கர்மவீரர் காமராஜர் போல ஒரு அரசியல்வாதியை இன்று உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்ட்டார்கள் . இன்று பேராயக்கட்சி தமிழருக்கும் , தமிழ்நாட்டிற்கு ,தமிழுக்கும் வஞ்சனை செய்துவருகின்றது என்ற கோபம் இருந்தாலும் . தமிழர்களுக்கு காமராஜரின் மீதான மதிப்பு மட்டும் என்றும் உயர்ந்தே உள்ளது .
.முன்பெல்லாம் லஞ்சம் வாங்காதவரை நல்லவர் என்றார்கள் .ஆனால் இப்போது லஞ்சம் வாங்குபவரை மிக நல்லவர் வாங்கினால் முடித்துக் கொடுத்து விடுவார் .என்கிறார்கள் .மக்கள் மனங்களில் மாற்றம் விதைத்து விட்டனர் இன்றைய அரசியல்வாதிகள் .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் இது .காமராஜர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு .அவரைப் பற்றி பல கவிதைகள் எழுதி இருக்கிறேன் .அவர் மீது வைத்துள்ள மதிப்பை இன்னும் உயர்த்தும் விதமாக நூல் இருந்தது .
நூல் தொடங்கும்போது காமராஜரின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடங்குகின்றது .
காமராஜர் பிறந்த நாள் 15.7.1903 தொடங்கி ,காந்தியடிகள் பிறந்த நாள் அன்று காமராஜர்மறைந்த நாள் 2.10.1975.வரை பல தகவல்கள் தேதிகளுடன் புள்ளி விபரமாக உள்ளன .நூல் ஆசிரியர் நீலம் மதுமயன் அவர்கள் கவிஞர் என்பதால் சொற்கள் கவித்துவமாக படிக்கச் சுவையாக உள்ளது .
காமராஜர் பற்றி எல்லோருடைய மனதிலும் மிகச் சிறந்த பிம்பம் உண்டு .அதை மேலும் உயர்த்தும் விதமாக நூல் உள்ளது .
உயர்ந்த உள்ளம் !
உயர்ந்த உள்ளம் இருப்பவரிடம் மட்டுமே உயர்ந்த செயல்கள் வெளிப்படும் .அவர்களால் மட்டுமே உயர்ந்தோரை உருவாக்க முடியும் .காமராஜர் ஓர் உயர்ந்த மனிதர் .உருவத்தால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர் .
நூலில் உள்ள கருத்துக்கள் யாவும் உண்மை .காமராஜருக்கு உயந்த உள்ளம் இருந்த காரணத்தால்தான் இன்றும் அவரை மறக்காமல் இருக்கின்றோம் .
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் .இன்றைய அரசியில்வாதிகள் என்ற வெயிலின் காரணமாக காமராஜர் என்ற நிழலிலின் அருமையை அனைவரும் உணர்கின்றோம் .இந்த நூல் படித்தபோது நான் எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வந்தது .
காமராஜர் காலம் பொற்காலம்
காமராஜர் காலமானதால்
காலமானது பொற்காலம் !
" எல்லோர்க்கும் கல்வி .அதன் மூலம் எல்லோர்க்கும் வேலை வாய்ப்பு .அதன் மூலம் எல்லோர்க்கும்உணவு .அதன் மூலம் எல்லோர்க்கும் சமத்துவம் காண வேண்டும் என்பதே காமராஜரின் இலட்சியம் ."
இன்று கல்வி ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி வருகின்றது .
காமராஜரின் வாழக்கையைச் சுட்டும் விதமாக குறிப்பிட்டுள்ள இந்த வரிகள் போதும் .
காமராஜர் எப்போதும் கடவுள் பக்தராக இருந்ததில்லை .ஆனால் அரசியல் பக்தர்கள் லட்சகணக்கில் அவரையே வணங்கினார்கள் ."
காமராஜரை கதாராடை அணிந்த கறுப்புச் சட்டைக்காரர் என்றார்கள் .காமராஜருக்கு கடவுள் பக்தி இல்லாமல் இருந்து இருக்கலாம் .ஆனால் அவருக்கு எளிமை ,நேர்மை ,மனிதநேயம் ,மக்கள் மீது அன்பு ,பாசம் ,நேசம் இருந்தது .
இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவசியம் கவனத்தில் கொள்ள வெடிய வைர வரிகள் இதோ .
"அரசுபபணியாளர் களை முடுக்கி விட வேண்டும் பணியை அரசியல்வாதிகள் செய்ய வேண்டுமே தவிர முடக்கிவிடும் பணியைச் செய்யக் கூடாது ."இந்த உயர்ந்த நாகரிகத்தை கர்மவீரர் காமராஜரிடம் கற்க வேண்டும் .
காமராஜர் முதல்வராக இருந்தபோது முதல்வரின் உதவியாளர் ,இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் பேச வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து இருக்கிறார் .அதற்கு அதிகாரியின் உதவியாளர் அவர்
தூங்குகிறார் எழுப்ப முடியாது என்று சொல்ல ,அழைப்பது முதல்வர் என்றபோதும் எழுப்ப மறுத்து விட்டார் .மறுநாள் இதனை கேள்விப்பட்டு மாற்றல் ஆகப் போகிறோம் என்ற பயத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வந்தபோது .முதல்வர் காமராஜர் சொன்னார் .உங்கள் உதவியாளர் மிக நேர்மையாக உள்ளார் .அவரை எனக்கு உதவியாளராகத் தாருங்கள் ."
இப்படி சொல்லும் முதல்வரை இன்று உலகம் முழுவதும் தேடினாலும் காண முடியாது .
.வெற்றியால் துடிக்காமல் ,தோல்வியால் துவளாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் காமராஜரைப் படிக்க வேண்டும் .அதற்க்கு இந்த நூலைப் படிக்க வேண்டும் .என்பது என் கருத்து .
அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் அல்ல .ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர் காமராஜர் .
அமெரிக்க அதிபர் நிக்சன் காமராஜராய் சிந்திக்க விரும்பி அனுமதி கேட்டார்கள் .காமராஜர் .அனுமதி தர வில்லை .சந்திக்க வில்லை .காரணம் கேட்டபோது .அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்று இருந்தபோது நிக்சநை சந்திக்க அனுமதி தரவில்லை .நம் தமிழ்நாட்டு தமிழரை மதிக்காதவரை நான் ஏன் சந்திக்க வேண்டும் .என்றார் .
.அமெரிக்க அதிபர் சந்திக்க விரும்பினால் ஓடோடி சந்திக்கும் அரசியல்வாதிகள் இன்று உள்ளனர் .தமிழக மக்களின் மனங்களில் என்றும் வாழும் நேர்மையின் சின்னம் காமராஜர் பற்றி தெரிந்து கொள்ள உதவும் மிக நல்ல நூல் இது .பாராட்டுக்கள் .