இதழ் பிரித்து என் காதல் இயம்பிவிட்டேன்

தயிற்று
வெண்ணையும்
சில நேரம்
சிந்திக்கும்
அவள்
வயிற்று
மடிப்பைப்
பார்த்து ......
மேசை
மெழுகுவர்த்தியும்
சில நேரம்
உருகிடும்
அவள்
கண்ணின்
பொன்
ஒளி
பார்த்து ....
வெண் பூண்டும்
சில நேரம்
வெட்கித்
தலை
குனியும்
அவள்
வெண்
மனத்தைப்
பார்த்து....
அழக்குச் சிலையும்
சில சமயம்
அசைந்து ஆடும்
அவள் உதட்டோர
துளி சிரிப்பைப்
பார்த்து ...
எந்த
நதியும்
தங்கி
ஓய்வெடுக்கும்
இவள்
பட்டாம்பூச்சி
நெஞ்சின்
நேச
நிழல்
பார்த்து ......
வெட்டவெளிக்
காற்றும்
சில சமயம்
மௌனமாகும்
இவள்
கட்டவிழ்த்து
விட்ட
கருங்கூந்தல்
பார்த்து .....
சிட்டுக்குருவிகளும்
சில
சமயம்
நடந்து
ஓடும்
அவள்
அழகு
அன்ன
நடை
பார்த்து.....
பட்டுப்பூச்சிகளும்
சில சமயம்
பணிந்து
விடும்
இவள்
பட்டுப்பாதம்
பட்டுத்
தளிர்த்த
புல் வெளி
பார்த்து .....
கற்பனையும்
சில சமயம்
கை கட்டி
நிற்கும்
இவள்
கவிதை
இடை
வெளி
பார்த்து....
இயற்கையே
இவ்வளவு
இயைந்து பார்த்த
இளம் தளிரை
இமை
இரண்டும் பார்த்தபோது எனை
இழந்துவிட்டேன்
இதழ் பிரித்து என் காதல்
இயம்பிவிட்டேன்.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
