திராவிடமும் தமிழும் -3
தமிழின் அடையாளம்
தடுமாறி நிற்கிறது இங்கே
திராவிடத்தால்
திராவிட மொழிகள் நான்கென
திடமாய் சொல்லி
அரசியல் ஆதாயம் தேடியபின்,
ஒதுங்கிக்கொள்ள
மற்ற மூன்று மொழிகளும்,
தனித்து நின்றது தமிழ்மட்டும்
திராவிடமாய்
தனித்து விடப்பட்ட தமிழுக்கு
தனிப்பெருமைத்தேட விரைந்தது
திராவிடக்கூப்பாடு!
அதிரடி நடவடிக்கையாய்
துரிதகதி வண்ணப்பூச்சுமுறையில்
இடமாற்றம் செய்தது
சிலபல எழுத்துக்களை
ஷ வை ட வென்றும்
ஹ வை அ வென்றும்
ஸ வை ச வென்றும்
தமிழுக்கு வந்ததாம்
தனித்தன்மை.
மனுஷனில் இருந்து மனிதனும்
விஷயத்தில் இருந்து விடயமும்
பூஜையில் இருந்து பூசையும் பிறந்து
தமிழ் ஆனது தூய்மையாய்
கம்ப்யூட்டரை கணினியாகவும்
மௌஸை சுட்டியாகவும் ஆக்கியவர்கள்
விசைப்பலகையை வைத்துக்கொண்டார்கள்
ஆங்கிலத்திலேயே
பில்டிங்கை கட்டடமாகவும்
இன்ஜினியரை பொறியாளராகவும்
கொண்டவர்கள்,
சிமெண்டையும் காங்க்ரீட்டையும்
அப்படியே விட்டு விட்டார்கள்,
இறுக !
தனித்தன்மை பெற்றது தமிழும்
தொன்மைமொழியாக செம்மொழியென்று.
இதற்கு தேவைப்பட்டது திராவிடத்திற்கு
ஆரியம் அரசியல் கூட்டணியாக
வாழ்ந்த வடக்கும் தேய்ந்த தெற்கும்
மறைந்தே போனது
இந்த
ஆரிய-திராவிட அரசியல் கூட்டணியில்
ஏக்கப்பட்ட ஒரேயொரு மாநில அவை சீட்டுக்காக.
தமிழ் இங்கே தனித்து விடப்பட்டது மீண்டும்
தடுமாறிய திராவிடத்தால்!
தடுமாற்றத்திற்கு காரணம்
‘டாஸ்மாக்’ஆ?