இவன்

நான் கவிஞன் அல்ல,
கவிதைக்கடலில் மூழ்கி
முத்தெடுத்தவனும் அல்ல,
கவிதைக் கடலில் சூறாவளி
நேர்ந்த பொழுது
ஊருக்குள் புகுந்த நீரில்
தாகத்திற்காய்
ஒரு குவளை நீர் குடித்தவன்.

எழுதியவர் : கௌதமன் ராஜகோபால் (16-Dec-10, 6:20 pm)
சேர்த்தது : GowthamanRajagopal
Tanglish : ivan
பார்வை : 411

மேலே