ஆதவனுக்கு ஒரு டிக்காசன் காபி

மழை விரலால்
முகில் வரைந்த கோலம்

சாலை குழியில்
குட்டி நீர்த் தேக்கம்......!

இல்லை இல்லை அது
காலை பகலவனுக்கு
பூமி போட்டு வைத்த காபி...!!

ஆறி இருந்தாலும் - அந்த
ஆதவன் இன்னும்

ஐந்தாறு நிமிடங்களில்
அமைதியாக குடிக்கத் தொடங்குவான்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jul-13, 5:21 am)
பார்வை : 123

மேலே